பாலினச் சமத்துவம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
July 22 , 2023 492 days 342 0
இது இரண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆகிய இரண்டு முகமைகளால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரு அமைப்புகள், 114 நாடுகளில் இருந்து பெறப்பட்டத் தரவுகளைத் தொகுத்து, பெண்களுக்கான அதிகாரமளிப்புக் குறியீடு (WEI) மற்றும் உலகப் பாலினச் சமத்துவக் குறியீடு (GGPI) ஆகிய இரட்டைக் குறியீடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து உள்ளன.
சராசரியாக, பெண்கள் தங்கள் முழுத் திறனில் 60 சதவீதத்தை மட்டுமே அடைய என்று அதிகாரம் பெற்றுள்ளனர்.
உலகப் பாலினச் சமத்துவக் குறியீட்டின் மதிப்பீட்டின் படி முக்கிய மனித மேம்பாட்டுப் பரிமாணங்களில் ஆண்களை விட பெண்கள் 28 சதவீதம் குறைவாகவே பெற்றுள்ளனர்.
இந்தக் குறியீட்டில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 114 நாடுகளில், எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை அல்லது முழுமையான பாலினச் சமத்துவ நிலையினை அடையவில்லை.
இந்த அறிக்கையானது முதல் முறையாக பெண்களின் முன்னேற்றம் மற்றும் பெண்களின் மனித மேம்பாடு முன்னேற்றம் பற்றிய விரிவானத் தரவுகளை வழங்கச் செய்கிறது.
இந்தக் குறியீட்டில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 114 நாடுகளில், 85 நாடுகளில் குறைந்த அல்லது நடுத்தர அளவிலேயே பெண்களுக்கு அதிகாரமளிக்கப் பட்டுள்ளது மற்றும் பாலினச் சமத்துவ நிலையினை அடைவதில் குறைந்த அல்லது நடுத்தரச் செயல் திறனே பதிவாகியுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக (21 நாடுகள்) அல்லது மிக அதிக மனித மேம்பாடு அடைந்த நாடுகளின் குழுமத்தில் (26 நாடுகள்) உள்ளன.