TNPSC Thervupettagam

பாலினச் சமூக விதிமுறைகள் குறியீடு – 2023

June 17 , 2023 527 days 272 0
  • பாலினச் சமூக விதிமுறைகள் குறியீடு என அழைக்கப்படும் இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆண் மற்றும் பெண் இருபாலரிடையேயும், "உலகம் முழுவதும் ஒரு சார்புப் பாலினச் சமூக விதிமுறைகள் பரவலாக காணப் படுகின்றன: ஏறக்குறைய 90% மக்கள் ஏழு சார்பு நிலைகளில் குறைந்தபட்சம் ஒரு சார்பு நிலையினைக் கொண்டுள்ளனர்".
  • 69 சதவீத மக்கள் பெண்களை விட ஆண்கள் தான் "சிறந்த" அரசியல் தலைவர்களாக உருவாகின்றனர் என்று நம்புகிறார்கள்.
  • பெண்களை விட ஆண்கள் தான் சிறந்த வணிக நிர்வாகிகளாக விளங்குகிறார்கள் என்று 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
  • 27 சதவீத மக்கள் மட்டுமே பெண்களும் ஆண்களுக்கு நிகரான உரிமைகளைக் கொண்டிருத்தல் ஜனநாயகத்திற்கு அவசியம் என்று நம்புகிறார்கள்.
  • 25 சதவீதத்தினர் ஆண் தன் மனைவியை அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்