மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், 2024-25 ஆம் நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்த பாலினம் சார் திட்ட நிதி ஒதுக்கீட்டின் பங்கு ஆனது 2025-26 ஆம் நிதியாண்டில் 8.86% ஆக அதிகரித்துள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டின் பாலினம் சார் திட்ட நிதி ஒதுக்கீட்டு (GBS) அறிக்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக 4.49 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு GBS ஒதுக்கீடானது, 2024-25 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 3.27 லட்சம் கோடி ரூபாயை விட 37.25% அதிகமாகும்.
பகுதி A திட்டங்கள் (100% பெண்கள் சார்ந்தத் திட்டங்கள்) 1,05,535.40 கோடி ரூபாய் (மொத்த GBS ஒதுக்கீட்டில் 23.50%) பெற்றது.
பகுதி B திட்டங்கள் (பெண்களுக்கான 30-99% ஒதுக்கீடு உள்ள திட்டங்கள்) 3,26,672.00 கோடி ரூபாய் (மொத்த GBS ஒதுக்கீட்டில் 72.75%) பெற்றது.
பகுதி C திட்டங்கள் (பெண்களுக்கான 30 சதவீதத்திற்கும் குறைவான ஒதுக்கீடு உள்ளவை) 16,821.28 கோடி ரூபாய் (மொத்த GBS ஒதுக்கீட்டில் 3.75%) பெற்றது.
2024-25 ஆம் நிதியாண்டில் 38 அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் 5 ஒன்றியப் பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மொத்தம் 49 அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் 5 ஒன்றியப் பிரதேசங்கள் ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளன.
2025-26 ஆம் நிதியாண்டிற்கான பாலினம் சார் திட்ட நிதி ஒதுக்கீட்டில் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஒதுக்கீடுகளை அறிவித்த முதல் 3 அமைச்சகங்கள் / துறைகளாவன:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (81.79%),
ஊரக மேம்பாட்டுத் துறை (65.76%) மற்றும்
உணவு மற்றும் பொது விநியோகத் துறை (50.92%).
பெண்களுக்கு 23% மட்டுமே வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா–கிராமீன் (PMAY-G) திட்டத்தில் குறைவான அமலாக்கமே பதிவாகி உள்ளது.