TNPSC Thervupettagam

பாலின் புத்துணர்வைக் கண்டறிய காகித உணர்வி

January 4 , 2019 2153 days 654 0
  • ஐஐடி கௌகாத்தியின் அறிவியலாளர்கள் பாலின் புத்துணர்வைக் கண்டறியவும் எந்த அளவிற்கு அது பதப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும் உதவும் ஒரு எளிமையான காகிதத் தொகுப்பை உருவாக்கியுள்ளனர்.
  • இது ஒரு திறன்பேசி செயலியின் உதவியோடு செயல்படும். இது பால் புளிப்பாக மாறும் முன்னரே உபயோகப்படுத்தப்பட்டதை உறுதி செய்ய உதவுகின்றது.
  • இந்த தொகுப்பைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்பட்ட பாலிலிருந்து பதப்படுத்தப்படாத பாலைக் கண்டறிய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
  • அல்கலைன் பாஸ்பேட்டாஸ் (Alkaline Phosphatase-ACP) எனும் பாலில் உள்ள ஒரு நொதி பாலின் தரத்தைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
  • அறிவியலாளர்கள் ACPயுடன் எளிதாக எதிர்வினையாற்றி நிறமாற்றமடையக் கூடியவாறு வேதியல் ஆய்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒரு சாதாரணமான வடிகட்டி தாளை இந்த கண்டுபிடிப்பானை உருவாக்க பயன்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்