ஐஐடி கௌகாத்தியின் அறிவியலாளர்கள் பாலின் புத்துணர்வைக் கண்டறியவும் எந்த அளவிற்கு அது பதப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும் உதவும் ஒரு எளிமையான காகிதத் தொகுப்பை உருவாக்கியுள்ளனர்.
இது ஒரு திறன்பேசி செயலியின் உதவியோடு செயல்படும். இது பால் புளிப்பாக மாறும் முன்னரே உபயோகப்படுத்தப்பட்டதை உறுதி செய்ய உதவுகின்றது.
இந்த தொகுப்பைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்பட்ட பாலிலிருந்து பதப்படுத்தப்படாத பாலைக் கண்டறிய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
அல்கலைன் பாஸ்பேட்டாஸ் (Alkaline Phosphatase-ACP) எனும் பாலில் உள்ள ஒரு நொதி பாலின் தரத்தைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அறிவியலாளர்கள் ACPயுடன் எளிதாக எதிர்வினையாற்றி நிறமாற்றமடையக் கூடியவாறு வேதியல் ஆய்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒரு சாதாரணமான வடிகட்டி தாளை இந்த கண்டுபிடிப்பானை உருவாக்க பயன்படுத்தியுள்ளனர்.