TNPSC Thervupettagam

பாலின இடைவெளி அறிக்கை, 2023

June 24 , 2023 520 days 607 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பாலின இடைவெளி அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்ற 146 நாடுகளில், பாலினச் சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது.
  • இது கடந்த ஆண்டில் இருந்த இடத்தை விட எட்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் அறிக்கையில் இந்தியா 135வது இடத்தினைப் பெற்றிருந்தது.
  • இந்தியாவின் ஒட்டு மொத்தப் பாலின இடைவெளியில் 64.3% இடைவெளி நிவர்த்தி செய்யப் பட்டுள்ளது.
  • இந்தியா பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு ஆகிய பிரிவுகளில் 36.7% அளவிற்கு மட்டுமே சமநிலையை எட்டியுள்ளது.
  • இப்பட்டியல் இந்தியாவின் அண்டை நாடுகளை, பாகிஸ்தான் (142), வங்காளதேசம் (59), சீனா (107), நேபாளம் (116), இலங்கை (115) மற்றும் பூடான் (103) என்ற இடங்களில், தர வரிசைப் படுத்தியுள்ளது.
  • ஐஸ்லாந்து தொடர்ந்து 14வது ஆண்டாக உலகிலேயே மிகவும் பாலினச் சமத்துவமிக்க நாடாக உள்ளது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15.1% பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் அரசியல் அதிகாரமளிப்புப் பிரிவில், இந்தியாவில் 25.3% சமநிலைப் பதிவாகியுள்ளது.
  • இது 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கைக்குப் பிறகு இந்தியா பெற்ற மிக உயர்ந்தத் தரவரிசையாகும்.
  • பொலிவியா (50.4%), இந்தியா (44.4%) மற்றும் பிரான்சு (42.3 %) உள்ளிட்ட 18 நாடுகளின் உள்ளூர் நிர்வாகங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்