கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது, LGBTQ நபர்களின் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் மற்றும் பாலின வெளிப்பாடு ஆகியவற்றை மாற்றும் ஒரு முயற்சியில் பயன்படுத்தப்படும் ஒரு அங்கீகரிக்கப்படாத செயல்முறை ஆகும்.
இந்தச் சட்டத்திற்கு இராணி இரண்டாம் எலிசபெத், அரச ஒப்புதலை அளித்தார்.
பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் அடிப்படையில், அரச அனுமதி என்பது ஒரு கனடிய நடைமுறை ஆகும்.
இதன் கீழ், ஒரு மசோதாவானது இறையாண்மை (ராணி எலிசபெத் II), மேலவை மற்றும் கீழவை ஆகிய பாராளுமன்றத்தின் மூன்று கூறுகளாலும் அங்கீகரிக்கப்பட்டு முறைப் படியாக சட்டமாகிறது.