”அடையாள மாற்றம்” (Identity disruption) காட்டும் மருத்துவ அறிக்கை இல்லாமல் குடிமக்கள் தமது 16 வயதிலிருந்து தங்களது பாலினம் மற்றும் பெயரினை மாற்றிக் கொள்வதனை அனுமதிக்கும் சட்டத்திற்கு போர்ச்சுக்கல் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மூன்றாம் நபர் பாதுகாப்பு மற்றும் அடையாள மாற்றத்துக்கான சிகிச்சை ஆகியவை இன்றி திருநங்கை அடையாளத்திற்கான சுய நிர்ணய உரிமையை வழங்கிய ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், மால்டா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவற்றின் வரிசையில் ஆறாவது நாடாக போர்ச்சுக்கல் இணைந்துள்ளது.
ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுடன் பிறந்த குழந்தைகளின் மீதான பாலின அறுவை சிகிச்சைக்கும் இச்சட்டம் தடை விதிக்கிறது. எனவே, பிற்காலத்தில் அவர்களது பாலினத்தை அவர்களால் தேர்வு செய்ய முடியும்.