ஹைதராபாத்தில் உள்ள தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி (Advanced Research for Powder Metallurgy & New Materials - ARCI) நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1 கிலோவாட் முதல் 20 கிலோவாட் வரை மின்சாரம் கொண்ட பாலிமர் மின்பகுளி சவ்வு எரிபொருள் மின்கல (polymer electrolyte membrane fuel cell - PEMFC) அமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
ARCI என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சித் தன்மை கொண்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.
PEMFCகள் புரோட்டான் - பரிமாற்ற சவ்வு எரிபொருள் மின்கலங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.
இவை குறைந்த வெப்பநிலையில் இயங்குகின்றன.
வழக்கமான மின்கல காப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படும் தொடர் ஆற்றலின் தேவையின்றி எரிபொருள் செல் அமைப்புகள் ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி நிலையான மின்சாரத்தை வழங்குகின்றன.
அவசரகாலச் சூழ்நிலைகளில் உடனடியாகச் செயலாற்றும் அவசரகாலச் செயல்பாட்டு மையங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.