TNPSC Thervupettagam

பாலியல் சுரண்டலுக்கெதிரான சட்டம்

December 18 , 2018 2042 days 522 0
  • ஆளுநர் சத்யபால் மாலிக்கால் தலைமை தாங்கப்படும் ஜம்மு & காஷ்மீரின் மாநில நிர்வாகக் குழுவானது பணியிடங்களில் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்க சட்டமொன்றை இயற்றியுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீரின் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் நிர்வாகமானது, ரன்பீர் தண்டனைச் சட்டத்தை (RPC - Ranbir Penal Code) திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதனால் பதவியிலிருப்பவர்கள் தங்களின் கீழ் பணிபுரிபவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவதைத் தடுப்பதற்காக சட்டம் இயற்றிய நாட்டின் முதல் மாநிலமாக ஜம்மு & காஷ்மீர் ஆகியுள்ளது.

குறிப்பு

  • இந்திய தண்டனைச் சட்டமானது (IPC - Indian Penal code) ஜம்மு & காஷ்மீருக்குப் பொருந்தாது. அதற்குப் பதிலாக அதனையொத்த ரன்பீர் தண்டனைச் சட்டமானது மாநிலம் முழுவதற்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்