பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் (UN Convention to Combat Desertification - UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாடானது(Conference of Parties - COP14) கிரேட்டர் நொய்டாவில் முடிவடைந்தது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் தில்லிப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
UNCCDயின் COP14 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் நிலச் சீரழிவில் நடுநிலைமையை (Land Degradation Neutrality - LDN) அடைவதற்கான உறுதிப்பாட்டுடன் முடிவடைந்தது.
இத்தகைய நடுநிலைமையானது ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த உலகம் முழுவதும் போதுமான நிலம் இருப்பதை உறுதி செய்கிறது என்று ஐ.நாவால் வரையறுக்கப் படுகின்றது.
தில்லிப் பிரகடனம் என்பது ஒவ்வொரு நாடும் நிலச் சீரழிவில் நடுநிலைமையை எவ்வாறு அடைவது என்பது குறித்த உலகளாவிய நடவடிக்கையின் ஒரு அறிக்கையாகும்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் UNCCDயின் தலைவராக 2 ஆண்டு காலத்திற்கு நீடிப்பார்.