TNPSC Thervupettagam

பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் - ஜுன் 17

June 17 , 2019 1931 days 676 0
  • பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினமானது ஜுன் 17 அன்று உலகமெங்கிலும் அனுசரிக்கப்படுகின்றது.
  • ஐ.நா. பொதுச் சபையானது 1995 ஆம் ஆண்டில் பாலைவனமாக்குதலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த வரைவை ஏற்படுத்திய போது இத்தினத்தின் அனுசரிப்பினை அறிவித்தது.
  • இந்த நாளானது பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைப் பற்றியும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இவ்வருடத்தின் கருத்துருவானது, “ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வளர்ப்போம்” என்பதாகும்.
  • இந்தக் கருத்துருவானது கடந்த 25 ஆண்டுகால செயல்பாடுகள் மற்றும் அடுத்த 25 ஆண்டு கால எதிர்பார்ப்பினையும் பிரதிபலிக்கின்றது.
  • ஐ.நா. சபையின் படி பாலைவனமாக்கல் என்பது வறண்ட, அரை வறண்ட மற்றும் உலர் துணை ஈரப்பதமான பகுதிகளில் ஏற்படும் நிலச் சீரழிவைக் குறிக்கின்றது.
  • பாலைவனமாக்கல் என்பது ஏற்கனவே இருக்கும் பாலைவனங்களின் விரிவாக்கத்தை குறிக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்