உள்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல அளவிலான வெற்றியைக் காட்டிய நாடுகள் அல்லது பிராந்தியங்களை மீண்டும் இணைப்பதை இந்த பயணக் குமிழியை உருவாக்குதல் என்ற திட்டம் உள்ளடக்குகிறது.
அத்தகைய ஒரு குமிழி ஒரு குழுவின் உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் வர்த்தக உறவுகளை மறுதொடக்கம் செய்யவும் பயணம் மற்றும் சுற்றுலாவை திறந்து விடவும் அனுமதிக்கும்.
பால்டிக் நாடுகள் தங்கள் எல்லைகளை ஒருவருக்கொருவர் திறந்து அவ்வகையான ஒரு “பயணக் குமிழியை” உருவாக்க உள்ளன.
பால்டிக் நாடுகள் என்பவை வடக்கு ஐரோப்பாவிலும் பால்டிக் கடலின் கிழக்கு கடற்கரையிலும் உள்ள நாடுகளாகும்.
எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியா ஆகியவை பால்டிக் நாடுகளாக குறிப்பிடப் படுகின்றன.
ரஷ்யா, சுவீடன், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, லாட்வியா, ஜெர்மனி, போலந்து, லித்துவேனியா ஆகியவை பால்டிக் கடலை எல்லையாகக் கொண்ட நாடுகளாகும்.