TNPSC Thervupettagam

பால்டிக் பயணக் குமிழி

May 24 , 2020 1555 days 575 0
  • உள்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல அளவிலான வெற்றியைக் காட்டிய நாடுகள் அல்லது பிராந்தியங்களை மீண்டும் இணைப்பதை இந்த பயணக் குமிழியை உருவாக்குதல் என்ற திட்டம் உள்ளடக்குகிறது.
  • அத்தகைய ஒரு குமிழி ஒரு குழுவின் உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் வர்த்தக உறவுகளை மறுதொடக்கம் செய்யவும் பயணம் மற்றும் சுற்றுலாவை திறந்து விடவும் அனுமதிக்கும்.
  • பால்டிக் நாடுகள் தங்கள் எல்லைகளை ஒருவருக்கொருவர் திறந்து அவ்வகையான ஒரு “பயணக் குமிழியை” உருவாக்க உள்ளன.
  • பால்டிக் நாடுகள் என்பவை வடக்கு ஐரோப்பாவிலும் பால்டிக் கடலின் கிழக்கு கடற்கரையிலும் உள்ள நாடுகளாகும்.
  • எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியா ஆகியவை பால்டிக் நாடுகளாக  குறிப்பிடப் படுகின்றன.
  • ரஷ்யா, சுவீடன், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, லாட்வியா, ஜெர்மனி, போலந்து, லித்துவேனியா ஆகியவை பால்டிக் கடலை எல்லையாகக் கொண்ட நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்