அண்டார்டிகாவில் உள்ள ஒரு ஆய்வகத்தினால் சேகரிக்கப்பட்ட ஒரு தரவானது நியூட்ரினோ துகள்களின் மூலமான பால்வெளி அண்டம் பற்றிய முதல் காட்சிப் புனைவினை உருவாக்கியுள்ளது.
இதுவரை ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்ட, நமது கோள் அமைந்துள்ள அண்டமானது துகள்களால் சித்தரிக்கப்பட்ட வகையிலான காட்சிப் புனைவினைக் காண்பது இதுவே முதல் முறையாகும்.
ஐஸ்கியூப் என்ற நியூட்ரினோ ஆய்வகமானது, செரென்கோவ் கதிர்வீச்சு எனப்படும் ஆற்றலின் வடிவத்தைக் கண்டறிவதற்காக வேண்டி பெரும் அழுத்தங்களின் கீழ் ஒரு ஜிகாடோன் அளவிலான அதி-ஒளிபுகு பனிக் கட்டியினைப் பயன்படுத்துகிறது.
இதன் விளைவாக தோராயமாக கோள வடிவிலான ஒளிப் பாய்வுகள் நிகழ்வதோடு, ஆராய்ச்சியாளர்களுக்குப் பால்வெளி அண்டத்தில் இருந்து வரும் சில வானியற்பியல் நியூட்ரினோக்களைச் சிறந்த முறையில் கண்டறிவதற்கான ஒரு திறனை அளிக்கிறது.