TNPSC Thervupettagam

பால்வெளி அண்டத்தின் முதல் காட்சிப் புனைவு

July 14 , 2023 502 days 322 0
  • அண்டார்டிகாவில் உள்ள ஒரு ஆய்வகத்தினால் சேகரிக்கப்பட்ட ஒரு தரவானது நியூட்ரினோ துகள்களின் மூலமான பால்வெளி அண்டம் பற்றிய முதல் காட்சிப் புனைவினை உருவாக்கியுள்ளது.
  • இதுவரை ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்ட, நமது கோள் அமைந்துள்ள அண்டமானது துகள்களால் சித்தரிக்கப்பட்ட வகையிலான காட்சிப் புனைவினைக் காண்பது இதுவே முதல் முறையாகும்.
  • ஐஸ்கியூப் என்ற நியூட்ரினோ ஆய்வகமானது, செரென்கோவ் கதிர்வீச்சு எனப்படும் ஆற்றலின் வடிவத்தைக் கண்டறிவதற்காக வேண்டி பெரும் அழுத்தங்களின் கீழ் ஒரு ஜிகாடோன் அளவிலான அதி-ஒளிபுகு பனிக் கட்டியினைப் பயன்படுத்துகிறது.
  • இதன் விளைவாக தோராயமாக கோள வடிவிலான ஒளிப் பாய்வுகள் நிகழ்வதோடு, ஆராய்ச்சியாளர்களுக்குப் பால்வெளி அண்டத்தில் இருந்து வரும் சில வானியற்பியல் நியூட்ரினோக்களைச் சிறந்த முறையில் கண்டறிவதற்கான ஒரு திறனை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்