சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக ஆராய்ச்சியாளர்கள் பாலில் உள்ள கலப்படத்தினை 30 வினாடிகளுக்குள் கண்டறியக் கூடிய வகையில் ஒரு முப்பரிமாண காகித அடிப்படையிலான ஒரு கையடக்கச் சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்தச் சோதனையை வீட்டிலேயே கூட மேற்கொள்ள முடியும்.
யூரியா, சலவைத்தூள், சலவைக்கட்டி, மாவுப்பொருள், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட் மற்றும் உப்பு உள்ளிட்ட பொதுவான கலப்படக் காரணிகளாகப் பயன்படுத்தப்படும் பல பொருட்களை இதன் மூலம் கண்டறிய முடியும்.
இந்தப் புதிய தொழில்நுட்பமானது மலிவு விலையிலானதாகும் என்பதோடு, தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் பால் கூழ்மங்கள் போன்ற பிற திரவப் பொருட்களில் உள்ள கலப்படத்தினைக் கண்டறியவும் இதனைப் பயன்படுத்தலாம்.