TNPSC Thervupettagam

பால் கலப்படத்தைக் கண்டறிய திறன்பேசி அடிப்படையிலான அமைப்பு

December 3 , 2018 2184 days 652 0
  • ஐதராபாத் IIT-யின் ஆய்வாளர்கள் பாலில் கலப்படம் செய்வதைக் கண்டுபிடிப்பதற்காக திறன்பேசி அடிப்படையிலான அமைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
  • அவர்கள் காகித நிறங்காட்டியைப் பயன்படுத்திப் பாலின் அமிலத்தன்மையை அளவிடக்கூடிய கண்டுபிடிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
  • மேலும் அமிலத்தன்மையில் ஏற்படும் மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக திறன்பேசியுடன் இணைக்கப்படக்கூடிய வழிமுறைகளையும் (Algorithms) இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • காரக்காடித் தன்மை சுட்டெண் மற்றும் தாளின் வண்ணங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் உணர்வி சில்லு அடிப்படையிலான அளவிடும் இந்த முறையானது வெவ்வேறு pH அளவுகளைச் சுட்டிக்  காட்டும்.
  • இந்த கலப்படத்தைக் கண்டறியும் அமைப்பில் ஆராய்ச்சியாளர்கள் ‘எலக்ட்ரோஸ்பின்னிங்’ என்ற செயல்முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்