பாஸ்பேட் கனிம இருப்புக் கண்டுபிடிப்பு
July 21 , 2023
494 days
242
- நார்வே நாட்டில் பாஸ்பேட் எனப்படும் மதிப்புமிக்க கனிமத்தின் மிகப்பெரிய இருப்புப் பகுதி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- இதனை மின்சார வாகனங்கள் மற்றும் சூரியசக்தி மின்தகடுகளுக்கு ஆற்றல் வழங்கச் செய்வதற்காகப் பயன்படுத்தலாம்.
- இந்தக் கனிம இருப்பில் 70 பில்லியன் டன்கள் பாஸ்பரஸ் இருப்பு உள்ளது.
- இது அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக உள்ளது.
- இதற்கு முன்னதாக மொராக்கோவின் மேற்கு சஹாரா பகுதியில் தோராயமாக 50 பில்லியன் டன்கள் அளவிலான மிகப்பெரிய பாஸ்பேட் பாறைகள் கண்டறியப் பட்டன.
- சீனா (உலகின் மிகப்பெரிய பாஸ்பேட் உற்பத்தியாளர்) மற்றும் எகிப்து ஆகியவை குறிப்பிடத் தக்க பாஸ்பேட் இருப்புக்களைக் கொண்டுள்ளன.
- பிரித்தெடுக்கப்பட்ட பாஸ்பரஸ் கனிமங்களின் சுத்திகரிப்புச் செயல்முறையானது சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்தக் கூடியதாகும்.
Post Views:
242