TNPSC Thervupettagam

பாஸ்பேட் கனிம இருப்புக் கண்டுபிடிப்பு

July 21 , 2023 494 days 240 0
  • நார்வே நாட்டில் பாஸ்பேட் எனப்படும் மதிப்புமிக்க கனிமத்தின் மிகப்பெரிய இருப்புப் பகுதி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இதனை மின்சார வாகனங்கள் மற்றும் சூரியசக்தி மின்தகடுகளுக்கு ஆற்றல் வழங்கச் செய்வதற்காகப் பயன்படுத்தலாம்.
  • இந்தக் கனிம இருப்பில் 70 பில்லியன் டன்கள் பாஸ்பரஸ் இருப்பு உள்ளது.
  • இது அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக உள்ளது.
  • இதற்கு முன்னதாக மொராக்கோவின் மேற்கு சஹாரா பகுதியில் தோராயமாக 50 பில்லியன் டன்கள் அளவிலான மிகப்பெரிய பாஸ்பேட் பாறைகள் கண்டறியப் பட்டன.
  • சீனா (உலகின் மிகப்பெரிய பாஸ்பேட் உற்பத்தியாளர்) மற்றும் எகிப்து ஆகியவை குறிப்பிடத் தக்க பாஸ்பேட் இருப்புக்களைக் கொண்டுள்ளன.
  • பிரித்தெடுக்கப்பட்ட பாஸ்பரஸ் கனிமங்களின் சுத்திகரிப்புச் செயல்முறையானது சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்தக் கூடியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்