TNPSC Thervupettagam
March 2 , 2021 1274 days 804 0
  • பி.எஸ்.எல்.வி செயற்கைக் கோளின் (பி.எஸ்.எல்.வி-சி 51) 53வது திட்டமானது பிரேசிலின் அமேசானியா - 1 என்ற ஒரு முதன்மை செயற்கைக் கோளையும் 18 இணை செயற்கைக் கோள்களையும் ஏவியுள்ளது.
  • முதன்முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் ஒரு பிரேசில் செயற்கைக் கோள் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது.
  • இது 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் ஏவுதலையும் குறித்தது.
  • இந்த இணை செயற்கைக் கோள்களில் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பதின் சதீஷ் தவான் சாட் (SD SAT) என்ற செயற்கைக் கோளும் அடங்கும்.
  • இந்த விண்கலத்தின் மேல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பொறிக்கப் பட்டுள்ளது.
  • இது எஸ்டி அட்டையில் (SD card  - பாதுகாக்கப்பட்ட டிஜிட்டல் அட்டை) “பகவத் கீதை” புத்தகத்தையும் சேர்த்து அனுப்புகிறது.
  • அமேசானியா - 1 செயற்கைக் கோளானது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் மூலம்  வணிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்