துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனமான பிஎஸ்எல்வி - சி 47 என்ற விண்கலமானது அமெரிக்காவிற்கான பிற வணிகப் பயன்பாடு கொண்ட நானோ செயற்கைக் கோள்களுடன் கார்டோசாட் - 3 என்ற செயற்கைக் கோளை விண்ணுக்கு எடுத்துச் சென்றது.
கார்டோசாட் – 3 மற்றும் 13 நானோ செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவியுள்ளது.
கார்டோசாட் - 3 செயற்கைக்கோள் ஆனது மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த அதிதிறன் வாய்ந்த மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் (உருவமாக்கல்) திறனைக் கொண்டுள்ளது.
கார்டோசாட் - 3 செயற்கைக் கோளின் ஆயுட் காலம் 5 ஆண்டுகளாகும்.
இது இஸ்ரோ அமைப்பால் உருவாக்கப்பட்ட கார்டோசாட் செயற்கைக் கோள் தொடரின் 9வது செயற்கைக்கோளாகும்.
கார்டோசாட் – 3 செயற்கைக் கோளின் புகைப்படக்கருவிகளில் ஒன்று நிலப் பரப்பில் 25 செ.மீ வரையில், தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை எடுத்து, அவற்றை கட்டுப்பாட்டகத்திற்கு அளிக்கின்றது.
அரசாங்கம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே 1 மீ தெளிவுத் திறனுக்குக் குறைவாக உள்ள இஸ்ரோவின் உயர் தெளிவுத் திறன் கொண்ட புகைப்படங்களை அணுக முடியும்.
கார்டோசாட்டின் நடைமுறைப் பயன்கள்: பெரிய அளவிலான நகர்ப்புறத் திட்டமிடல், கிராமப்புற வளங்கள் & உள்கட்டமைப்பு மேம்பாடு, கடலோர நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பு போன்றவை.
இதே திட்டத்தில் கார்டோசாட் செயற்கைக் கோளைத் தவிர, அமெரிக்காவின் வணிகப் பயன்பாடு கொண்ட 13 நானோ செயற்கைக் கோள்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன.