TNPSC Thervupettagam

பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது வருடாந்திர அவை கூடுகை

April 20 , 2018 2412 days 771 0
  • இந்திய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் புது தில்லியில் நடைபெற்ற பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது வருடாந்திர அவை கூடுகையில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.
  • பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது வருடாந்திர அவை கூடுகையின்  கருப்பொருள் “இந்தியாவை மாற்றிடும் பெண்கள்” (WOMEN TRANSFORMING INDIA)  என்பதாகும்
  • இந்த கூடுகையின் நினைவாக, தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் அல்லது வணிகத்தில் உச்சத்தைத் தொட்ட மற்றும் தங்களது பணிக் களத்தில் உத்வேகமூட்டும் தலைவராக (inspirational leaders)  உள்ள 9 இந்திய பெண் சாதனையாளர்களுக்கு பிக்கி பெண்கள் அமைப்பின் நினைவு விருதினை (FLO ICON AWARDS ) வழங்கி பிக்கி பெண்கள் அமைப்பு   அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இந்தியாவில் முதல் முறையாக, அமைப்புசார் பொருளாதாரத் துறைகளில் (formal sector) நிலவும் பாலின சமத்துவத்தின் அளவினை மதிப்பிட  பாலின சமத்துவ குறியீடு (Gender Parity Index)  ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

பிக்கி பெண்கள் அமைப்பு

  • இந்தியாவில் தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கான உச்சபட்ச அமைப்பான வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகக் கழகங்களினுடைய சம்மேளனத்தின்   (Federation of Indian Chamber of Commerce & Industry -FICCI) ஒரு பிரிவாக 1983 ஆம் ஆண்டு பிக்கி பெண்கள் அமைப்பு   தோற்றுவிக்கப்பட்டது.
  • பிக்கி அமைப்பின் மகளிர் பிரிவே (women wing) பிக்கி பெண்கள் அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்