பிக்மி பால்ஸ் கேட்ஷார்க் (Pygmy false catshark) என்ற பெயர் கொண்ட ஒரு புதிய ஆழ்கடல் சுறா இனமானது வட இந்திய கடற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (Central Marine Fisheries Research Institute - CMFRI) இணைந்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் மங்களூர் ஹவுண்ட் சுறா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சுறா இனம் இதுவாகும்.
இந்த இனத்தின் அறிவியல் பெயர் “பிலேனோனாசஸ்” என்பதாகும். “பிலேனஸ்” என்பதன் பொருள் தட்டையானது என்பதாகும். நாசஸ் என்பதன் பொருள் “மூக்கு” என்பதாகும்.