உலக பெண்கள் தினமான மார்ச் 8 அன்று மத்தியப் பிரதேச மேற்கு மின் பகிர்மான நிறுவனம் (Madhya Pradesh West Power Distribution Company (MPWPDC) பெண் மின்துறை பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் “பிங்க் மின் மண்டலத்தை” (Pink Electricity zone) தொடங்கியுள்ளது.
இதுவே இந்தியாவின் முதல் இளஞ்சிவப்பு மின் மண்டலமாகும்.
இந்த இளஞ்சிவப்பு மின் மண்டலத்தில் உதவி மின்துறை பொறியாளர்கள், இளநிலை மின்துறை பொறியாளர், லைன் மேற்பார்வையாளர், லைன் மேன்கள், மீட்டர் கணக்கீட்டாளர்கள், கணக்காளர்கள், கம்யூட்டர் ஆப்பரேட்டர்கள் என அனைவரும் பெண்களேயாவர்.
இந்த இளஞ்சிவப்பு மின் மண்டலம், 25 பெண் மின்துறைப் பணியாளர்களை கொண்டுள்ளது. இவர்கள் 13,000 மின் இணைப்புகளின் ஆற்றல் பராமரிப்புப் பணியை மேற்கொள்வர்.