TNPSC Thervupettagam

பிசிஜி தடுப்பு மருந்து மற்றும் கோவிட் – 19 

April 4 , 2020 1604 days 499 0
  • பிசிஜி அல்லது பேசில்லி கால்மெட்டி குரின் என்பது காச நோய்க்கான ஒரு தடுப்பு மருந்தாகும்.
  • பிசிஜி தடுப்பு மருந்தானது ஒரு வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்துவதற்காக அறியப் படுகின்றது. மேலும் இது தொழுநோய் மற்றும் உள்ளக சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்குவதற்காக அறியப் படுகின்றது.
  • தங்களது சிறு வயதில் பிசிஜி தடுப்பூசியைப் பெற்ற வயதான மக்களைக் கொண்ட நாடுகள் கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிராக ஒரு சிறப்பான பாதுகாப்பைப் பெற்று இருக்கின்றன என்று ஒரு சமீபத்திய அறிக்கை கூறுகின்றது.
  • ஏனெனில் கோவிட் – 19 ஆனது குறிப்பாக முதியோர்களை மிக எளிதில் தாக்கும் திறன் கொண்டது.
  • ஸ்பெயின், பிரான்சு, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் நாடு தழுவிய பிசிஜி கொள்கையைக் கொண்டிராத காரணத்தினால் கோவிட் – 19 தொற்றினால் மிக அதிக அளவிலான இறப்பைச் சந்தித்து வருகின்றன.
  • கோவிட் – 19 தொற்றால் அதிக அளவு இறப்பைக் கண்ட இத்தாலியானது இதுவரை நாடு தழுவிய பிசிஜி தடுப்பு மருந்தைச் செயல்படுத்தவில்லை.
  • இந்தியா 1948 ஆம் ஆண்டு முதல் தொடர் காச நோய் தடுப்பு மருந்துக் கொள்கையைக் கொண்டுள்ளது.
  • ஜப்பான் 1947 ஆம் ஆண்டு முதல் பிசிஜி தடுப்பு மருந்துக் கொள்கையைக் கொண்டு ள்ளது.
  • ஆரம்பக் கட்டத்தில் கோவிட் – 19 தொற்று பாதிப்பைக் கண்டுள்ள நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்துள்ளது. இது கடுமையான சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்த போதிலும் இதுவரையில் குறைந்த எண்ணிக்கையிலான இறப்பையேக் கண்டுள்ளது.
  • ஈரான், தனது பிசிஜி கொள்கையை 1984 ஆம் ஆண்டு முதல் தான் செயல்படுத்தி வருகின்றது. எனவே அங்கு 36 வயதிற்கு மேல் உள்ளவர் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்