கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தின் போது சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சுமார் 1,500 பேரின் தண்டனைத் தன்மையினை அதிபர் ஜோ பிடன் மாற்றி அறிவித்துள்ளார்.
வன்முறை சாராதக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 அமெரிக்கர்களுக்கும் அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இது நவீன கால வரலாற்றில் ஒற்றை நாளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகப்பெரிய கருணை அடிப்படையிலான செயலாகும்.
2017 ஆம் ஆண்டில் பதவி விலகுவதற்கு சற்று முன்னதாக பராக் ஒபாமா 330 பேருக்கு மன்னிப்பு வழங்கிய நிகழ்வானது, ஒற்றை நாளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பெரிய மன்னிப்புச் செயலாக கூறப்படுகிறது.