நேபாளத்தின் முதல் பெண் அதிபரான பித்யா தேவி பண்டாரி (Bidya Devi Bhandari) இரண்டாவது முறையாக மீண்டும் நேபாளத்தின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் நேபாள காங்கிரஸ் தலைவரான குமாரி லட்சுமி ராயை வீழ்த்தி அறுதிப் பெரும்பான்மைப் பெற்று பித்யா தேவி பண்டாரி மீண்டும் நேபாளத்தின் அதிபராகி உள்ளார்.
நேபாள அதிபர் பதவியானது, நேபாளத்தின் புதிய குடியரசுக் கூட்டுறவு அரசியலமைப்பின் கீழ், ஓர் சடங்கு முறையிலான நாட்டின் தலைவர் (ceremonial Head of the State) பதவியாகும்.
நேபாளத்தில் அதிபர் தேர்தலுக்கான தேர்ந்தெடுப்புக் குழுவானது (electoral college) நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்ட அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டதாகும்.