TNPSC Thervupettagam

பித்ரகனிகாவில் உப்பு நீர் வாழ் முதலைகள்

January 18 , 2024 183 days 202 0
  • 2024 ஆம் ஆண்டில் ஒடிசாவின் பித்ரகனிகா தேசியப் பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள உப்பு நீர் அல்லது கழிமுக முதலைகளின் (க்ரோக்கோடைலஸ் போரோசஸ்) எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது.
  • கேந்திரபாரா மாவட்டத்தில் அமைந்துள்ள பூங்காவில் 1,811 முதலைகள் உள்ளன.
  • கடந்த ஆண்டு பதிவான முதலைகளின் எண்ணிக்கை 1,793 ஆகும்.
  • பித்ரகனிகா, மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தப்படியாக அமைந்த இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு ஆகும்.
  • இந்த இரண்டு பகுதிகளும் இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஊர்வன இனமான உப்பு நீர் முதலைகள் அதிகம் காணப்படும் மூன்று பகுதிகளில் இரண்டு ஆகும்.
  • மூன்றாவது பகுதி அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்