பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது, வழிகாட்டுதலுடன் கூடிய பினாகா பல் குழல் உந்துகணை ஏவுதல் (MBRL) அமைப்பின் ஏவுதல் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இது பினாகா அமைப்பின் தாக்குதல் வரம்பினை சுமார் 75 கிலோ மீட்டருக்கும் மேல் உயர்த்துகிறது.
தற்போது, இந்த அமைப்பில் இரண்டு வகைகள் உள்ளன.
அவற்றுள் முதலாவது 40 கிலோமீட்டர் தூர வரம்புடைய மார்க் I, இரண்டாவது 75 கிலோ மீட்டர் தூர வரம்புடைய மார்க் II ஆகும்.
மேலும் இதன் தாக்குதல் வரம்பினை சுமார் 120 கிலோ மீட்டர் தூர வரம்பு வரையிலும், பின்னர் 300 கிலோ மீட்டர் வரையிலும் மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு 4 வினாடிக்கும் ஒரு உந்துகணை என்ற சரியான வீதத்தில், வெறும் 44 வினாடிகளில் அனைத்து 12 உந்துகணைகளையும் சால்வோ என்ற முறையில் (ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவுதல்) ஏவக் கூடிய திறன் கொண்டது.
பினாகா உந்துகணை ஏவுதல் அமைப்பானது, அமெரிக்க நாட்டின் ஹிமர் ஆயுத அமைப்பிற்கு இணையானதாகக் கருதப்படுகிறது.
இதனை வாங்குவதற்கான முதல் ஆணையினை ஆர்மேனியா பதிவு செய்தது.
தற்போது பிரான்சு அரசும், இந்த அமைப்பினை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.