TNPSC Thervupettagam

பினாகா ராக்கெட் முறை - வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு

June 16 , 2018 2225 days 773 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பை, அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கியழிக்க மேம்படுத்தப்பட்ட  வரம்பு மற்றும் சரியான தொழில்நுட்பத் தன்மையுடன் துல்லியமான வழிகாட்டு ஏவுகணையாக மாற்றியிருக்கின்றது.

  • இது
    • புனேவைச் சார்ந்த போர் தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்.
    • ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்
    • இமாரத்தில் உள்ள ஆராய்ச்சி மையம்

ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டது.

  • இது மல்டி பேரல் ராக்கெட் ஏவு வாகனத்தை பயன்படுத்தி ஏவப்பட்டது. இதற்கு சிவபெருமானின் வில்லின் பெயரைக் கொண்டு பினாகா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 1999 கார்கில் சண்டையில் பினாகா மார்க் I பயன்படுத்தப்பட்டது.
  • இதன் ஆரம்பகட்ட மாதிரியான பினாகா மாதிரி I என்ற கலத்தின் 40 கிலோமீட்டர் வரம்போடு ஒப்பிடுகையில் பினாகா மார்க் II ஐந்து மீட்டர் துல்லியத் தன்மையுடன் 70 முதல் 80 கிலோமீட்டர் அளவிற்கு மேம்படுத்தப்பட்ட வரம்பெல்லையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்