பினாக்கா எம்.கே. III ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பானது ஒடிசாவின் சந்திப்பூரிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
இந்த ராக்கெட்டின் துல்லியத் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் அதன் வரம்பை மேம்படுத்துவதற்காகவும் வழிசெலுத்தல், கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதல் அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இது ஏவுகணையாக மாற்றப்படுகின்றது.
பினாகா என்பது ஒரு பீரங்கி ரக ஏவுகணை அமைப்பாகும். இது 75 கி.மீ தூரத்திற்கு சென்று அதிக துல்லியத் தன்மையுடன் எதிரி எல்லைக்குள் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
ஏவுகணையின் வழிசெலுத்தல் அமைப்பானது NAVIC என்று அழைக்கப்படும் இந்தியப் பிராந்திய கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைப்பின் (Indian Regional Navigation Satellite System - IRNSS) மூலம் செயல்படுத்தப் படுகின்றது.
இந்த ஏவுகணை அமைப்பானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் (Defence Research and Development Organisation - DRDO) சேர்ந்த பல்வேறு ஆய்வகங்களினால் கூட்டாக உருவாக்கப் பட்டுள்ளது.