TNPSC Thervupettagam
December 22 , 2019 1674 days 599 0
  • பினாக்கா எம்.கே. III ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பானது ஒடிசாவின் சந்திப்பூரிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
  • இந்த ராக்கெட்டின் துல்லியத் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் அதன் வரம்பை மேம்படுத்துவதற்காகவும் வழிசெலுத்தல், கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதல் அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இது ஏவுகணையாக மாற்றப்படுகின்றது.
  • பினாகா என்பது ஒரு பீரங்கி ரக ஏவுகணை அமைப்பாகும். இது 75 கி.மீ தூரத்திற்கு சென்று அதிக துல்லியத் தன்மையுடன் எதிரி எல்லைக்குள் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
  • ஏவுகணையின் வழிசெலுத்தல் அமைப்பானது NAVIC என்று அழைக்கப்படும் இந்தியப் பிராந்திய கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைப்பின் (Indian Regional Navigation Satellite System - IRNSS) மூலம் செயல்படுத்தப் படுகின்றது.
  • இந்த ஏவுகணை அமைப்பானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் (Defence Research and Development Organisation - DRDO) சேர்ந்த பல்வேறு ஆய்வகங்களினால் கூட்டாக உருவாக்கப் பட்டுள்ளது.
    • ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
    • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்
    • ஆதாரம் மற்றும் பரிசோதனை அமைப்பு
    • உயர் ஆற்றல் பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்