மேம்படுத்தப்பட்ட வரம்பு (range) மற்றும் வழிகாட்டு அமைப்பினைக் (guidance system) கொண்ட, பினாகா இராக்கெட்டின் (Pinaka rocket) மேம்படுத்தப்பட்ட பதிப்பு இரண்டாவது நாளாகத் தொடர்ந்து ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
பினாகா இராக்கெட் அமைப்பின் முந்தைய பதிப்பானது வழிகாட்டி அமைப்பு இல்லாத ஒன்றாகும். தற்போது இது வழிகாட்டு அமைப்பு உடைய பதிப்பாக மாற்றப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் இமாரத் ஆராய்ச்சி மையத்தால் (Research Centre, Imarat-RCI) மேம்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு உபகரணங்கள் இந்த இராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன. இமாரத் ஆராய்ச்சி மையம் ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation-DRDO) கீழ் செயல்படுகின்றது.
இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பிற்கான பரிமாற்றமானது பினாகா இராக்கெட்டின் வரம்பு மற்றும் துல்லியத்தினை அதிகரிக்க உதவும். இதன் பழைய வரம்பு 40 கிலோ மீட்டராகும். தற்போது இதன் புதிய வரம்பு 70 கிலோ மீட்டராகும்.
இந்தச் சோதனையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், சந்திப்பூரில் உள்ள ஆதாரம் மற்றும் பரிசோதனை பகுதியின் (Proof & Experiment Establishment -PXE) ஏவுதல் இடத்திலிருந்து பல்குழல் இராக்கெட் செலுத்தியிலிருந்து (multi barrel launcher) ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.