TNPSC Thervupettagam

பின்னி – இந்தியாவின் ஒராங்குட்டான்

May 31 , 2019 2007 days 744 0
  • இந்தியாவின் ஒரே ஒராங்குட்டான் பின்னி ஆகும்.
  • இது, தனது 41-வது வயதில் ஒடிசாவின் நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் காலமானது.
  • இந்த மனிதக் குரங்கானது 25 வயதிருக்கும் போது பூனேவில் உள்ள இராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவிலிருந்து ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
  • தற்பொழுது உயிர்வாழும் பெரும் மனிதக்குரங்கு இனங்களில் ஒராங்குட்டான்களும் ஒன்றாகும்.
  • இவை இந்தோனேஷியா மற்றும் மலேசியாவைத் தனது வாழிடமாகக் கொண்டுள்ளது. ஆனால் இவை தற்பொழுது போர்னியோ மற்றும் சுமத்ராவின் மலைக் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  • தற்பொழுது உயிர் வாழும் பெரும் மனிதக்குரங்கு இனங்கள்:
    • சிம்பன்சிகள்
    • கொரில்லாக்கள்
    • ஒராங்குட்டான்கள்
நந்தன்கனன் விலங்கியல் பூங்கா
  • நந்தன்கனன் விலங்கியல் பூங்காவானது ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காவாகும்.
  • இது 1960 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் இருந்து உலக விலங்கியல் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் மன்றத்தில் (WAZA - World Association of Zoos and Aquariums ) இணைந்த முதலாவது விலங்கியல் பூங்கா இதுவாகும். (2009 ஆம் ஆண்டில் இணைந்தது)
  • கஞ்சியா ஏரி நந்தன்கனன் விலங்கியல் பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்