TNPSC Thervupettagam

பின்லாந்து – உலகின் மகிழ்ச்சிகரமான நாடு

March 22 , 2020 1617 days 510 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகளிடையே மிகக்குறைந்த சமத்துவமின்மை மற்றும் மிகக்குறைந்த வறுமை ஆகியவற்றுடன் மிக உயரிய வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றைப் பின்லாந்து நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர்.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் நடப்பு மூன்றாவது ஆண்டிற்காக உலகின் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • உலக மகிழ்ச்சிகர அறிக்கைக்காக ஆராய்ச்சியாளர்கள் 156 நாடுகளில் உள்ள மக்களை, அவர்களின் மகிழ்ச்சிகர நிலையை மதிப்பிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
  • ஒவ்வொரு நாட்டிற்கும் மகிழ்ச்சிகர நிலைக்குரிய மதிப்பெண்ணைத் தருவதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக உதவி, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழலின்  நிலை ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் பொது அவையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • மொத்தமுள்ள 156 நாடுகளிடையே இந்தியா 144வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • OECD என்பது 36 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையே ஒரு பொருளாதார அமைப்பாகும்.
  • இது பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் உலக வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 1961ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்