TNPSC Thervupettagam

பிபா கால்பந்து விருதுகள் 2020

December 23 , 2020 1306 days 647 0
  • சிறந்த பிபா ஆண் விளையாட்டு வீரராக போலந்தைச் சேர்ந்த ராபர்ட் லீவாண்டோஸ்கீ என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டில் பிபா சிறந்த ஆண் விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லூகா மோட்ரிக் என்பவரைத் தொடர்ந்து  லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி தற்பொழுது முதலாவது வீரராக லீவாண்டோஸ்கீ என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் நகர விளையாட்டு வீரரான லூசி பிரான்சு என்பவர் சிறந்த பிபா  பெண் விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • லிவர்பூலைச் சேர்ந்த ஜுர்கெஸ் க்ளோப் என்பவர் தொடர்ந்து 2வது முறையாக ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான பயிற்சியாளர் விருதை வென்றுள்ளார்.
  • நெதர்லாந்து பெண்கள் அணியின் பயிற்சியாளரான சரினா வியாக்மென் என்பவர் இரண்டாவது முறையாக சிறந்த பிபா பெண்கள் அணியின் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்