TNPSC Thervupettagam

பிம்ஸ்டெக் ராணுவப் பயிற்சி

June 13 , 2018 2231 days 632 0
  • இந்தியா, பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) முதல் ராணுவப் பயிற்சியை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகாராஷ்டிராவின் புனேவில் நடத்த இருக்கின்றது.

  • இந்தப் பயிற்சியின் கருத்துரு இடைநகரங்களில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியையும் சுற்றி வளைத்தல் மற்றும் தேடுதல் பயிற்சிகளையும் கொண்டதாக இருக்கும்.
  • இந்த ராணுவப் பயிற்சியின் முக்கிய நோக்கம் உறுப்பு நாடுகளிடையே யுக்திகள் இணக்கத்தை மேம்படுத்துவதையும், தீவிரவாத எதிர்ப்புப் பிரிவில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்திடுவதையும் கொண்டதாக இருக்கும்.
  • 2017-ம் ஆண்டு புதுதில்லியில் பிம்ஸ்டெக் நாடுகள் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டன. ஆனால் இதுவே இந்த அமைப்பிற்கான முதல் ராணுவப் பயிற்சியாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்