அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பல துறைகளில் 19 பொது நபர்களின் பங்களிப்பிற்காக அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இதில் சில நான்கு அறியப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள்: ஹிலாரி கிளிண்டன், புரவலர் மற்றும் முக்கிய ஜனநாயகக் கட்சி நன்கொடையாளர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராபர்ட் F. கென்னடி (மரணத்திற்குப் பின்னதாக) ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, மனித இனவியலாளர் ஜேன் குடால் மற்றும் நடிகர் டென்சல் வாஷிங்டன் ஆகியோரும் இந்த விருதுப் பட்டியலில் உள்ளனர்.
பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் என்பது அமெரிக்காவின் உயரிய குடிமை விருதாகும் என்ற நிலையில் இது ஒரு நபர் தனது வாழ்நாளில் செய்தப் பணிக்கான அங்கீகாரமாக வழங்கப் படுகிறது.
இது அதிபர் ஹாரி S. ட்ரூமன் (1945-1953) அவர்களால் 1945 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.