பிரஞ்சு (பாக்குவெட்) ரொட்டிகளுக்கு யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியப் பொருள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
பாக்குவெட் என்பது மாவு, தண்ணீர், உப்பு மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றால் செய்யப்பட்ட நீண்ட மற்றும் மெல்லிய ரொட்டியாகும்.
மேலும் இது பிரான்சு நாட்டில் அந்நாட்டவரின் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப் படுகிறது.
பிரெஞ்சு அடுமனைகளின் தேசிய கூட்டமைப்பின் கருத்துப்படி பிரான்சில் ஒவ்வோர் ஆண்டும் ஆறு பில்லியனுக்கும் அதிகமான ரொட்டிகள் தயாரிக்கப் படுகின்றன.
யுனெஸ்கோ அமைப்பின் 'மகத்தான கலாச்சாரப் பாரம்பரியம்' என்பது "வாய்வழி மரபுகள், கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகை நிகழ்வுகள், இயற்கை மற்றும் பிரபஞ்சம் பற்றிய அறிவு மற்றும் நடைமுறைகள் அல்லது பாரம்பரிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான அறிவு மற்றும் திறன்களை உள்ளடக்கியது" ஆகும்.