TNPSC Thervupettagam

பிரதம மந்திரி சஹஜ் பிஞ்லி ஹர் கர் யோஜனா (செளபாக்யா)

September 26 , 2017 2617 days 842 0
  • நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றம் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின்மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின் கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
  • இதன் மூலம் அரசு 2019க்குள் அனைவருக்கும் 24×7 மின் சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.
சௌபாக்கியா திட்டத்தில் உள்ளடங்கியவன
  • வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய்க்கு மாற்றாக மின் இணைப்பை அளித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்.
  • கல்விச் சேவையில் மேம்பாடு அளித்தல்
  • சிறந்த சுகாதார சேவையை அளித்தல்
  • ரேடியோ (வானொலி), தொலைக்காட்சி, அலைபேசி வழியே மேம்பட்ட இணைப்பு
  • மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அளித்தல் குறிப்பாக பெண்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை அளித்தல்
  • பொருளாதார செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்