TNPSC Thervupettagam

பிரதம மந்திரி சுரக்ஸ பீம யோஜனா

April 21 , 2018 2283 days 691 0
  • பிரதம மந்திரி சுரக்ஸ பீம யோஜனா திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை41 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் Auto-Debit முறையின் மூலமாக 2015-2016 காலகட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை85 கோடியாக இருந்தது. இது தற்போது (2017-2018) 13.41 கோடியாக உயர்ந்துள்ளது..

பிரதம மந்திரி சுரக்ஸ பீம யோஜனாவைப் பற்றி

  • 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் விபத்தில் மரணமடைந்தவர்கள் அல்லது விபத்தினால் முழுவதும் ஊனமடைந்தவர்களுக்கான ரூ.2 லட்சம் மதிப்புடைய காப்பீடு மற்றும் பகுதியளவு நிரந்தர ஊனமடைந்தவர்களுக்கான ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழான காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1 முதல் அதைத் தொடர்ந்த ஆண்டின் மே 31 வரையிலான காலகட்டத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு மத்திய அரசுத் துறைகளினால் செயலாக்கம் செய்யப்பட்டு வந்த விபத்துக் காப்பீட்டுக் கொள்கைகள் ஜீன் 1, 2017 முதல் பிரதம மந்திரி சுரக்ஸ பீம யோஜனா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
  • பிரதம மந்திரி சுரக்ஸ பீம யோஜனா திட்டமானது வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுடன் ஒன்றிணைந்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களினால் வழங்க/நிர்வகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்