எண்முறை பொருளாதார உள்ளடக்கத்திற்கான மையத்தின்படி (Centre for Digital Financial Inclusion- CDFI) அரசானது பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தின் (Pradhan Mantri Matru Vandana Yojana PMMVY) கீழ் 48.5 லட்சம் தாய்மார்களுக்கு 1600 கோடி ரூபாயை வழங்கி இருக்கின்றது.
இந்த செயல்முறையானது CDFI மையத்தால் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தின் பொதுப் பயன்பாட்டு மென்பொருள் அமைப்பு (PMMVY – Common Application Software/CAS) வழியாக கருத்தாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா
1 ஜனவரி 2017லிருந்து செயல்படத் தொடங்கிய இத்திட்டத்தின்படி,
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களின் முதல் குழந்தைக்கு 3 தவணையாக நேரடி பயன் பரிமாற்ற (DBT - Direct Benefits Transfer) முறையில் ரூ. 5000 வழங்கப்படும்.
இத்திட்டமானது மத்திய மற்றும் மாநில அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் முறைசார் முறையில் பணிபுரிவோர்களுக்குப் பொருந்தாது.
இத்திட்டமானது மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டமாகும். இதன் செலவு பகிர்வு வீதமானது
மத்திய அரசிற்கும் மாநிலங்கள் மற்றும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே 60 : 40 என்றும்
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் 3 இமாலய மாநிலங்களுக்காக 90 : 10 என்றும்
சட்டசபையைக் கொண்டிராத யூனியன் பிரதேசங்களுக்கு 100% என்றும் இருக்கும்.