பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா
October 9 , 2024
47 days
107
- வேளாண் துறையில் உள்ள அனைத்து மத்தியத் திட்டங்களையும் பின்வரும் இரண்டு புதிய திட்டங்களாக ஒன்றிணைப்பதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
- பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும்
- கிருஷோன்னதி யோஜனா (KY).
- இந்தத் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கு 69,088.98 கோடி ரூபாய் ஆகும். மாநில அரசுகள் மீதமுள்ள 32,232.63 கோடி ரூபாய் பங்கினை அளிக்க வேண்டும்.
- PM-RKVY நிலையான வேளாண் முறையினை மேம்படுத்துவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- KY திட்டம் ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் வேளாண் துறையில் தன்னிறைவைக் குறிக்கும்.
- இத்திட்டங்கள் ஆனது மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும்.
Post Views:
107