TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் விரிவாக்கம்

September 20 , 2023 306 days 238 0
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தினை 2025-26 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது PMUY திட்டப் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 10.35 கோடியாக உயர்த்தும்.
  • உஜ்வாலா 2.0 திட்டத்தின் தற்போதைய நடைமுறைகளின்படி, உஜ்வாலா பயனாளிகளுக்கு முதல் முறையாக எரிவாயு மறுநிரப்புதல் சேவை மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2016 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று பல்லியாவில் (உத்தரப் பிரதேசம்) தொடங்கப்பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள சுமார் 80 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிபொருளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த இலக்கு எட்டப்பட்டது.
  • பின்னர், PMUY திட்டத்தின் 2வது கட்டமானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப் பட்டது, ஆரம்ப கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 10 மில்லியன் இணைப்புகள் என்ற இலக்கானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அடையப் பட்டது.
  • பின்னர், உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மேலும் 6 மில்லியன் இணைப்புகளை அரசாங்கம் வழங்கியது.
  • தற்போது இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்