கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்புள்ள நிவாரணத் தொகைத் திட்டத்தை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது அரசு மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார நல மையங்களில் கோவிட் – 19 தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதார நலப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவ அறைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆஷா திட்டப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், தொழில் நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இந்த சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளடங்குவர்.
கோவிட் – 19 தொற்று நோய்க்குச் சிகிச்சையளிக்கும் எந்தவொரு மருத்துவப் பணியாளரும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிட்டால், அவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
விவசாயிகள் 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வருமான நிதியுதவியான ரூ.6,000 என்ற தொகையிலிருந்து ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக ரூ.2000 ஐப் பெற இருக்கின்றனர்.
8.7 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2000 நிதித் தொகையானது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் வழங்கப் படுகின்றது.