கர்ப்பக் கால பரிசோதனைத் திட்டமான பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரிவ் அபியான் (Pradhan Mantri Surakshit Matriva Abhiyan – PMSMA) திட்டத்தின் கீழ் கர்ப்பகால உடல் பரிசோதனை செய்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடியினை கடந்திருக்கிறது.
இந்த திட்டம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பாதுகாப்பான பிரசவத்தை, ஊரகப்பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் அரசு சுகாதார மையங்களிலும் மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதை உறுதி செய்திட ஒரு விரிவான, இலவச மற்றும் தரமான கர்ப்ப கால பரிசோதனைகள் பிரதி மாதம் 9ம் தேதி கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்திட இத்திட்டம் உறுதி பூண்டுள்ளது.
இந்த திட்டம் நாடு முழுவதும் தனியார்துறை மருத்துவர்களின் பங்களிப்போடு நடத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் 3 முதல் 6 மாத கால அளவிற்கு மட்டுமே பொருந்தும்.
அதிகாரம் அளிக்கப்படாத மாநிலங்களின் செயற்குழு (Non Empowered States Action Group) என்ற பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.
அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்களுக்கான பிரிவில் (Empowered States Action Group) இராஜஸ்தான் மாநிலம் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.