பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனாவிற்கான வழிகாட்டுதல்கள்
August 21 , 2024 97 days 156 0
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது பிரதான் மந்திரி-சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மாதிரி சூரிய சக்தி உற்பத்தி கிராமம் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதற்காக வேண்டி பல்வேறு செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
‘மாதிரி சூரிய சக்தி உற்பத்தி கிராமம்’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி சூரிய சக்தி உற்பத்திக் கிராமத்தினை உருவாக்க இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மொத்தமாக 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி சூரிய சக்தி உற்பத்தி கிராமத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப் படுகிறது.
போட்டி முறையின் கீழ் ஒரு கிராமமாக கருதப்படுவதற்கு, ஒரு கிராமம் ஆனது 5,000 (அல்லது சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு 2,000) என்ற அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையினைக் கொண்ட வருவாய் கிராமமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனுடன் வெற்றி பெறும் கிராமம், 1 கோடி ரூபாய் மத்திய நிதி உதவி மானியத்தினைப் பெறும்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியன்று பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இது மேற்கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி கலங்களின் உற்பத்தி திறனின் பங்கை அதிகரிக்கச் செய்வதையும், குடியிருப்புக்களை சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்ய அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது 75,021 கோடி ரூபாய் செலவில் 2027 ஆம் நிதியாண்டு வரை செயல் படுத்தப் பட உள்ளது.