'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரையில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் உற்பத்தி வசதியினைப் பெற உள்ளன.
இது இந்தியா நாட்டினை எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற்றதாக மாற்றும்.
மேற்கூரையில் நிறுவப்படும் சூரியசக்தி மின் தகடுகள் ஆனது, பிரதான மின் விநியோக அலகுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப் பட்ட ஒளிமின்னழுத்த தகடுகள் ஆகும்.
இதனால், தொடரமைப்பு மின்சாரத்தின் நுகர்வு குறைவதோடு, நுகர்வோருக்கான மின்சாரச் செலவினத்தினையும் மிச்சப்படுத்துகிறது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் நிறுவப்பட்ட சூரிய சக்தியின் திறன் சுமார் 73.31 GW என்ற அளவை எட்டியுள்ளது.
அதேவேளையில், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மேற்கூரையில் நிறுவப் பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 11.08 ஜிகாவாட் ஆகும்.
2022 ஆம் ஆண்டிற்குள் 40,000 மெகாவாட் அல்லது 40 ஜிகாவாட் என்ற ஒட்டு மொத்த நிறுவப் பட்ட திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசானது 2014 ஆம் ஆண்டில், மேற்கூரையில் நிறுவப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.