TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ஜன விகாஸ் காரியகிரம்

May 11 , 2018 2247 days 724 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பல்துறை வளர்ச்சித் திட்டத்தை சீரமைத்து, பிரதான் மந்திரி ஜன விகாஸ் காரியகிரம் என்று பெயரிடுவதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மேலும் இக்குழு, இத்திட்டம் 14-வது நிதிக் குழுவின் மீதமிருக்கும் காலம் முழுமையும் தொடர்வதற்கும் அனுமதியளித்துள்ளது.
  • இத்திட்டம் அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக் குறைபாடுகளை களைய எண்ணுகிறது.
  • மேலும் இத்திட்டம், அதில் கூறியுள்ள வரையறைகளைப் பொறுத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களினால் அடையாளம் காட்டப்படும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலும் அமல்படுத்தப்படும்.
  • பல்துறை வளர்ச்சித் திட்டம் 2008-2009-ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25 சதவிகித சிறுபான்மையின மக்களைக் கொண்டுள்ள அடையாளம் காணப்பட்டுள்ள சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான சொத்துக்களையும் அடிப்படை வசதிகளையும் உருவாக்கும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்